ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா , 3 பேர் பலி ; முதல்வர் சந்திரசேகர ராவ்

டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மார்க்கஸில் (மசூதி) கடந்த மார்ச் 13 முதல் 15 வரை மத கூட்டம் தொடர்பான மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் பல மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் சில தினங்களுக்கு முன் இறந்தனர். பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தெலுங்கானா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது. சுகாதாரத்துறை அமைச்சர் எட்டெலா ராஜேந்திரனும் கொரோனா தொற்று குறித்தும் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு சோதனை நடத்தப்படுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.