இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பிரகதி பவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது முதல்வர் கூறியதாவது : தெலுங்கானாவில் நேற்று (ஏப்.,1) ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்கள். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் தெலுங்கானாவில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இந்நிலையில் நேற்று 3 பேர் என தற்போது 9 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 30 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.
தொடர்ந்து, டில்லி மாநாட்டில் பங்கேற்ற தெலுங்கானாவைச் சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மாநாட்டில் பங்கேற்றவர்கள் யாராக இருந்தாலும் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மாநில அரசு உங்களுக்கு தேவையான சிகிச்சைகளை செய்ய தயாராக உள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இன்னும் வரும் நாட்களில் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மதித்து அரசிற்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.
கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கும் மற்ற நபர்களுக்கும் அரசு துணைநிற்கும். அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அவசர கால மருந்து பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு N-95 முகமூடி, ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் போன்ற மருந்துகளும் பாதுகாப்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா , 3 பேர் பலி ; முதல்வர் சந்திரசேகர ராவ்