ஊரடங்கு உத்தரவு காரணமாக, டில்லியில் பணிபுரிந்து உத்தர பிரதேசம் மற்றும் பீஹாருக்கு தொழிலாளர்கள்

புதுடில்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக, டில்லியில் பணிபுரிந்து உத்தர பிரதேசம் மற்றும் பீஹாருக்கு தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலை யார் ஆரம்பித்தது என்பது தெளிவாகவில்லை. இருப்பினும், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகர் மிருத்தஞ்ஜெய் குமார் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜ., தேசிய பொது செயலர் பிஎல் சந்தோசும் தனது பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.