கொரோனா வைரஸ்: சிக்கி தவிக்கும் இத்தாலி; ஜப்பானிலிருந்து திரும்பிய இந்தியர்கள்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக முக்கிய கவனத்தை பெற்றுள்ள இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.


இத்தாலியை தொடர்ந்து தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து அறிவித்துள்ளன.


கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய சீனாவை தாண்டி மற்ற நாடுகளில் முதல்முறையாக இந்த வைரஸ் தாக்குதல் மிக வேகமாக பரவிவருவதாக புதன்கிழமையன்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.